அமெரிக்காவில் பள்ளிக்கு வெடிகுண்டு வைப்பதாக ஜோக் அடித்த சீக்கிய மாணவன் கைது..!!

Read Time:2 Minute, 30 Second

7a6ccda3-c493-4b9c-bf12-c17c30e50e17_S_secvpfஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் 7–வது வகுப்பு படித்த சீக்கிய சிறுவன் அர்மான்சிங்சரை (12).

வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் வெடி குண்டு குறித்து பேசினார்கள். அப்போது அர்மான்சிங் தான் பையில் வெடி குண்டு வைத்திருப்பதாகவும், அதை வைத்து பள்ளியை தகர்க்க போவதாக கேலியாக ‘ஜோக்’ அடித்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் வகுப்பு ஆசிரியையிடம் புகார் செய்தனர். உடனே பள்ளி நிர்வாகம் போலீசுக்கு தெரிவித்தது. அதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வகுப்பறையில் இருந்த மாணவர்களை வெளியேற்றினர்.

பின்னர் அர்மான் சிங்கிடம் சோதனை செய்தனர். ஆனால் அவனிடம் வெடி குண்டு எதுவும் இல்லை. இருந்தாலும் அவனை கைது செய்து அழைத்து சென்றனர்.

அவனிடம் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். பிறகு சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைத்தனர். இதற்கு அர்மான்சிங்கின் அண்ணன் ஆக்ஸ்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி முதல்வர் ஜுலி ஹார் குரோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எல்லா மாணவர்களும் வெடிகுண்டு குறித்து ‘ஜோக்’ அடித்து பேச இந்திய சிறுவனான அர்மான் சிங்கை மட்டும் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

டெக்சாசில் டல்லாஸ் பள்ளியில் மாணவன் அகமது முகமது தயாரித்த கடிகாரத்தை வெடிகுண்டு என தவறாக கருதி அவரை போலீசார் கைது செய்து விலங்கிட்டு அழைத்து சென்றனர். அதே போன்று தற்போது அர்மான்சிங்கும் தேவையின்றி கைது செய்யப்பட்டிருக்கிறான் என ‘டுவிட்டர்’ இணைய தளத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளியில் ஆராய புதிய டெலஸ்கோப்: சீனா நிறுவியது…!!
Next post போர் உச்சத்தில் இருக்கும் சிரியாவிற்கு சுற்றுலா செல்ல ரஷ்ய நிறுவனம் ஏற்பாடு…!!