மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!

Read Time:7 Minute, 10 Second

timthumb (1)புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் நடைபெற்று மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பிக்கவைப்பதற்கான முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய நகர்வுகளானது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குறியானதாக தெரிகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

படுகொலை தொடர்பாக நீதிமன்ற அமர்வுகளில் நடைபெறும் சம்பவங்களையும் கொலையோடு தொடர்புடைய சந்தேக நபர்களது தற்போதைய செயற்பாடுகளையும் பார்க்கும்போது சட்டத்துறையை சில அரசியல் சக்திகள்; முடக்குவதைக் காண முடிகின்றது. இத்தகைய செயற்பாடானது தற்போதைய சூழ்நிலையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை கொடுக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவியைப் படுகொலையை செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவென திரண்டுவந்த தரப்பினரும்;; ஒதுங்கி வருவதை காண முடிகின்றது.

ஆனால் இன்று அனைத்து செயற்பாடுகளும் ஏதோ ஒரு காரணத்திற்காக தடுக்கப்படுவதாகவோ அன்றி மறைக்கப்படுவதற்கான ஒரு முயற்சிகள் மட்டும்தான் நிலவிவருகின்றது.

மாணவி வித்தியாவை படுகொலை செய்ததற்கு பிரதான சூத்திரதாரியாக தற்போது இனங்காணப்பட்டுள்ளவர் சுவிஸ் குமார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த சந்தேக நபர் ஒரு வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர் என்பதுடன் தமிழ் அரசியற் கட்சி ஒன்றின் கொழும்பு மாவட்ட பிரதிநிதிகள் சிலருடன்;; நெருங்கிய தொடர்பை வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அரசியல் செல்வாக்கும் பணப் பின்புலமும் உள்ளவரான சுவிஸ் குமாரை காப்பாற்ற பலவகையாக முயற்சிகள்; மேற்கொள்ளப்பட்டு வருவதால்தான் இன்றுவரை குற்றவாளிகளின் தடயவியல் அறிக்கைகளைக்கூட நீதிமன்றில் வெளிப்படுத்த வில்லை.

இது இவ்வாறிருக்க, சுவிஸ் குமார் என்னும் பிரதான குற்றவாளியை பொதுமக்கள் புங்குடுதீவுப் பகுதியில் வைத்து பிடித்து பொலிஸாரிடம் கொடுத்திருந்தும் அவர் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இரவோடு இரவாக சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஆயத்தங்களுடன் கொழும்புக்கு தப்பிச்செல்ல வைக்கப்பட்டிருந்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட தினத்தன்று குறித்த பெண் அரசியல்வாதி சுவிஸ் குமாரை காப்பாற்ற மக்களுடன் அதிகளவு முரண்பட்டமை தொடர்பான செய்திகளும் வீடியோ ஆதாரங்களுடன் வெளிவந்திருந்தது.

தப்பிச்செல்ல தயாராக இருந்த சுவிஸ் குமார் கொழும்பில் இருப்பதை அறிந்த புங்குடுதீவு மக்கள் குடாநாட்டில் பொலிசாருக்கு கொடுத்த அதிக அழுத்தம் காரணமாகவே கொழும்பில் பதுங்கியிருந்த சுவிஸ் குமாரை வெள்ளவத்தை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி தமிழ் மக்களது வாக்குகளை பெற்றுவரும் கூட்டமைப்பின் வி.ரி.தமிழ்மாறன் என்ற சட்டத்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி பல இலட்சங்களை பெற்றுக் கொண்டு சுவிஸ் குமாரை பாதுகாக்க இன்றுவரை பாடுபடுவதும் நீதி கிடைப்பதை தடுத்துக் கொண்டிருப்பதாக சில தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிவான் லெனின்குமார்; அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நீதியின்பால் நிற்பது இந்த வழக்கில் ஒரு நம்பிக்கையை ஊட்டுகின்றதாக தெரிகின்றது.

அத்துடன் இச்சம்பவத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விசேட நீதிமன்றம் ஒன்றினூடாக இந்த வழக்கை விசாரித்து நியாயமான தீர்ப்பு கிடைக்க வழிவகுப்பதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த செயற்றிட்டத்தை நிறைவேற்றுவதை துரிதப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தவேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை காட்டிக்கொள்பவர்கள் மாணவி வித்தியாவின் படுகொலையை ஒரு அரசியல் இலாபத்;திற்கான களமாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர். தவிர உண்மைகளை அவர்கள் ஒருபோதும் வெளிக்கொணர முன்வர மாட்டார்கள்.

படுகொலை செய்தவர்களுக்கு உண்மையான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் சமூக அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரல் எழுப்பவதனூடாகவே நீதியை பெற்றுக் கொள்ள முடியும். மாறாக போலித்தனமானவர்களை நம்பியிருந்தால் பட்டமரத்தில் பால் வருவதை எதிர்பார்த்திருப்பதற்கு ஒப்பானதாகவே அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுருதி ஹசனின் வைரலாகும் பர்சனல் வீடியோ…!!
Next post வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி: தண்ணீர் கேட்கும் போர்வையில் வல்லுறவு முயற்சி..!!