நாகர்கோவிலில் தம்பதியை தாக்கி 35 பவுன் நகை பறிப்பு…!!

Read Time:4 Minute, 1 Second

096f9c32-9cc0-4521-9982-91f39b6dab69_S_secvpfநாகர்கோவில் ஒழுகின சேரி ஆராட்டு ரோடு பிருந்தாவன் சாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட்டுகள் சேகரித்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு சுசீந்திரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் லாக்கர் வசதி உள்ளது. இதனால் இவர் தனது மனைவி நகைகளை இந்த லாக்கரில் வைத்திருப்பார். திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது இந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுப்பது வழக்கம்.

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வங்கியின் லாக்கரில் இருந்து 35 பவுன் நகையை சதாசிவம் எடுத்துள்ளார். நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து அந்த நகைகளை மீண்டும் வங்கி லாக்கரில் வைக்க அவர் முடிவு செய்தார். இதை தொடர்ந்து இன்று காலை சதாசிவம் தனது மனைவி முத்துலட்சுமியுடன் (47) மோட்டார்சைக்கிளில் சுசீந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இடலாக்குடி ஆனைப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் மட்டும் ஹெல்மட் அணிந்திருந்தார். சதாசிவம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர், சதாசிவத்தின் மனைவி முத்துலட்சுமியின் தோளில் கிடந்த கைப்பையை பறித்தார். முத்துலட்சுமி கைப்பையை விடாமல் அந்த வாலிபருடன் போராடினார். இதனால் அவரை கொள்ளையர் தாக்கினர்.

இதனால் நிலை தடுமாறி சதாசிவமும், அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளோடு சாலையில் தவறி விழுந்தனர். அதற்குள் மோட்டார்சைக்கிள் வாலிபர்கள் கைப்பையுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

அந்த கைப்பையில் தான் அவர்கள் 35 பவுன் நகையை வைத்திருந்தனர். மேலும் வங்கி லாக்கர் சாவி, வங்கி புத்தகம், விலையுயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் திரண்டனர். இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி, சப்–இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற முத்து லட்சுமியின் கைப்பையில் அவரது செல்போன் இருப்பதால் அந்த செல்போன் டவர் மூலம் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சதாசிவம் தம்பதி லாக்கரில் வைக்க நகைகளை கொண்டு செல்லும் தகவலை அறிந்த நபரே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போன் வெடித்து சிறுவன் கண்கள் பாதிப்பு: எழும்பூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை…!!
Next post ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டு சென்னை பெண் தற்கொலை…!!