பஸ் தின ஊர்வலத்தில் மோதல்–கல்வீச்சு: நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!

Read Time:2 Minute, 24 Second

78ffd641-00bc-48dd-9ea0-d0826941cc4a_S_secvpfசென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடியில் இருந்து மந்தைவெளி நோக்கிச் சென்ற 41–டி பஸ்சில் மாணவர்கள் பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்ட னர்.

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகில் பஸ் வந்த போது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த மாண வர்களுக்கும், பஸ்சில் வந்த மாணவர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. அப்போது பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பயணிகளும் பொதுமக்களும் கூச்சல் போட்டனர். சாலையில் சென்ற பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மோதல் சம்பவம் குறித்து பஸ் டிரைவர் ரவி, கண்டக்டர் சங்கர் ஆகி யோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களான புதுவண் ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (20), புழலைச் சேர்ந்த அமீர் மொய்தீன் (19). அம்பத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (19), ஓட் டேரியைச் சேர்ந்த அஜய் குமார் (19) மீஞ்சூரைச் சேர்ந்த சக்திவேல் (19), திருவொற்றியூரைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

கும்பலாக கூடுதல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் முதன் முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்…!!
Next post அஜித்திற்கு போட்டியாக மன்சூரலிகான்..!!