இலங்கை அணிக்கு பதிலடி – டோனி பாராட்டு..!!

Read Time:2 Minute, 44 Second

yuyuuuuyஇலங்கைக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியில் வென்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் குவித்தது. தவான் 25 பந்தில் 51 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித்சர்மா 36 பந்தில் 46 ஓட்டங்களும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 38 ஓட்டங்களும், ஹிர்த்திக் பாண்ட்யா 12 பந்தில் 27 ஓட்டங்களும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பெரைரா 3 விக்கெட்டும், சமீரா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 69 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்துக்கொண்டது.

கபுகேந்திரா அதிகபட்சமாக 32 ஓட்டங்களும், தலைவர் சன்டிமால் 31 ஓட்டங்களும் எடுத்தனர். அஸ்வின் 14 ஓட்டங்களு கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். நெக்ரா, பும்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி தலைவர் டோனி கூறியதாவது:– இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். 200 ஓட்டங்கள் வரை நெருங்கிவிட்டோம். பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாரமாக வீசினார்கள். துடுப்பாட்ட வீரர்களை மிஞ்சும் வகையில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது பாராட்டுதலுக்கு உரியதாகும்.

புதுமுக வீரர் பாண்ட்யா சர்வதேச போட்டியில் தற்போது தான் ஆடுவதால் வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாப் 4’ வரிசையில் யுவராஜ்சிங்கை களம் இறங்குவதற்கான வாய்ப்பு மிகவும் கடினமே. ஆனால் அவருக்கு மேலும் வாய்ப்புகளை கொடுக்க முயற்சிப்போம். தவானின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி தந்தையுடன் கைது- மின்வாரிய அதிகாரியும் சிக்கினார்…!!
Next post கூடுவாஞ்சேரி அருகே 2 என்ஜினீயரிங் மாணவர்கள்–நண்பர் காரில் கடத்தல்: 2 பேர் கைது…!!