துருக்கியில் கார் குண்டு தாக்குதலில் 28 பேர் பலி: ராணுவ வாகனம் தகர்ப்பு…!!

Read Time:1 Minute, 54 Second

8b26ecad-4c14-446b-b85c-9dc531967e87_S_secvpf (1)துருக்கி நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்தது.

தலைநகரம் அங்காராவில் ராணுவ தலைமையகம் அருகே இன்று ராணுவ வீரர்கள் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரில் வந்து அந்த பஸ் மீது மோதினான். இதில் காரில் இருந்த குண்டு வெடித்து ராணுவ பஸ் நொறுங்கியது.

மேலும் அந்த பகுதியில் இருந்த ஏராளமான வாகனங்களும் சேதமாகின.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். 61 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் என்று தெரிய வந்தது.

தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

வெடிகுண்டு தாக்குதலால் அங்காரா நகரில் பதட்டம் நிலவுகிறது.

துருக்கி அதிபர் அகமது தேவ துக்லு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுபயணம் செய்து வந்தார். வெடிகுண்டு தாக்குதல் நடந்ததையடுத்து உடனடியாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்.

தாக்குதல் நடந்த இடத்தில் வெடிக்காத நிலையில் கிடந்த சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலசலகூடத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடன், கூடவே சென்றார் சர்வா?! (நடந்தது என்ன..?)
Next post இங்கிலாந்து எல்லையில் பறக்க முயன்ற ரஷ்ய போர் விமானங்கள் சுற்றி வளைப்பு…!!