அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி…!!

Read Time:3 Minute, 0 Second

3b4ff0ca-b10f-4956-bc1e-49f21afc2b4f_S_secvpfஅமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் டெக்காஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கலாசாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இந்த நிலையில் இங்கு மாணவர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி அளித்து இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறைக்கு துப்பாக்கிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கும்படி பல்கலைக்கழக தலைவர் கிரேகேளி பென்வெசுக்கு இ–மெயில் மற்றும் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சிலர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்காஸ் பல்கலைக்கழகத்தில்தான் முதன் முறையாக துப்பாக்கி சம்பவம் நடந்தது. 1966–ம் ஆண்டு முன்னாள் கடற்படை வீரர் சார்லஸ் விட்மேன் துப்பாக்கி சூடு நடத்தினார். அதில் 14 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.

தற்போது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கிறது. எனவே, போலீசாரால் உடனடியாக வந்து மாணவர்களை காப்பாற்ற முடியாது.

எனவே அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வகுப்பறை வரையிலும் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவசியம் என உரிமை பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி வழங்கும் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

டெக்கால் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் துப்பாக்கி எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு விடுதலை…!!
Next post வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி தண்டவாளங்களை பரிசோதிக்கும் 4 தொழிலாளிகள் பலி..!!