மியான்மர் நாட்டின் புதிய மந்திரிசபையில் இணைகிறார், ஆங் சான் சூகி…!!

Read Time:3 Minute, 6 Second

66f34d22-bbee-4e78-9d48-05d0f7fa6053_S_secvpfமியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்றுகாலை தொடங்கியது.

மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில் தற்போதைய அதிபரின் பதவிக் காலம் வருகிற 31–ந் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து புதிய அதிபர் வருகிற ஏப்ரல் 1–ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். மியான்மர் சட்டப்படி அதிபரை எம்.பி.க்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. சூகி இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் ஆங் சான் சூகி, அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

மியானமரின் புதிய அதிபராக பொறுப்பேற்றுகொண்ட ஹிதின் கியாவ், இன்று தனது புதிய மந்திரிசபை பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில், ஆங் சான் சூகியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மியான்மர் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டவர் அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மந்திரியாக செயலாற்ற குறிப்பிடும்படியான தடை ஏதுமில்லை என தெரிகிறது.

எனவே, அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவரான ஆங் சான் சூகி பல முக்கிய துறைகளின் மந்திரியாக விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் அறிமுகமானது Street View…!!
Next post பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தாருடன் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சந்திப்பு…!!