பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?

Read Time:4 Minute, 15 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (4)சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. ஆனால், இதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதுமட்டுமில்லாமல், பாலியல் தொழிலாளிகளுக்கு அரசாங்கமே பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.

குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி வருவதால், பாலியல் தொழிலாளிகள் விளம்பரம் செய்வதற்கு, ‘மேக்-அப்’ செய்வதற்கு, அழகை மெருகூட்ட மருத்துவ சிகிச்சை செய்வதற்கு அரசு கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது.

இதுமட்டுமில்லாமல், சூரிச் நகரில் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு சாலையோரம் சிறிய அளவில் பல அறைகளை அரசாங்கம் அமைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பாலியல் பெண்கள் மட்டுமே இந்த அறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பாலியல் தொழிலாளிகளுக்கு இத்தனை வசதிகள் உள்ளபோதிலும், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என கூறப்படுகிறது.

கடந்த 2013ம் ஆண்டு சூரிச் நகரின் மத்தியில் உள்ள சில பொது இடங்களில் நின்று வாடிக்கையாளர்களை அழைக்க கூடாது என அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்ததால், பாலியல் தொழிலாளிகள் நகரத்திற்கு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை சில ஆள் காட்டி நபர்கள் மூலம் கண்டுபிடிப்பதால், அவர்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் பாலியல் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு சுவிஸின் SP கட்சியின் சூரிச் நகர கவுன்சிலரான Christine Seidler என்பவர் அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அதாவது, சூரிச்சில் பாலியல் தொழிலை அரசாங்கத்தின் செலவில் அரசாங்கமே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்கத்திற்கு அவர் கடந்த வாரம் ஒரு மனுவையும் அனுப்பியுள்ளார்.

சூரிச் மாகாண ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த மனுவிற்கு சம்மதம் தெரிவித்தால், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால், சுவிஸ் மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SVP எனப்படும் சுவிஸ் மக்கள் கட்சியின் கவுன்சிலரான Martin Gotzl என்பவர் பேசுகையில், ‘பாலியல் தொழிலை ஏற்று நடத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்று இல்லை.

அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பாலியல் தொழிலை அரசு நடத்த வேண்டும் என்பது ஒரு மோசமான முன்னுதாரனமாக ஆகிவிடும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிசால் சுட்டு கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்: 87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு…!!
Next post வவுனியா நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் குப்பைதொட்டியில் கண்டெடுப்பு…!!