அமெரிக்கா: கூண்டுக்குள் குதித்த சிறுவனை காப்பாற்ற கொரில்லா குரங்கை சுட்டுக் கொன்ற காவலர்கள்..!!

Read Time:1 Minute, 19 Second

201605291357516980_Cincinnati-zoo-gorilla-shot-dead-as-boy-falls-into-enclosure_SECVPFஅமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் பழமையான வனவிலங்கு காப்பகம் உள்ளது. நேற்று இந்த காப்பகத்துக்கு பெற்றோருடன் வந்த நான்கு வயது சிறுவன் அங்குள்ள கொரில்லா குரங்குகளை நெருக்கமாக பார்க்கும் ஆசையில் வேலியை தாண்டி கூண்டு பகுதிக்குள் குதித்து விட்டான்.

அவனை நெருங்கி வந்த சுமார் 250 கிலோ எடைகொண்ட 17 வயது கொரில்லா குரங்கு அவனை தாக்க முயன்றது. குரங்கிடம் இருந்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ’ஹராம்பே’ என்றழைக்கப்படும் அந்த குரங்கை வனவிலங்கு காப்பக காவலர்கள் சுட்டுக் கொன்றனர். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்ட அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தையடுத்து, சின்சினாட்டி நகர வனவிலங்கு காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…!!
Next post சேலம் அருகே அரசு அதிகாரி காருடன் எரித்துக்கொலை – கைதான வாலிபர் வாக்குமூலம்..!!