மூன்று நாள் காச்சல்: கிளிநொச்சி வைத்தியசாலை பெண் பரிசாதகர் மரணம்..!!

Read Time:3 Minute, 32 Second

download (2)மூன்று நாள் காச்சல்: கிளிநொச்சி வைத்தியசாலை பெண் பரிசாதகர் மரணம், உடல் யாழ்வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசாதகர் ஒருவர் மூன்று நாள் காச்சலை தொடர்ந்து வைத்தியசாலையலில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தமையடுத் அரவது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த ராசா றமணி வயது 44 என்பவர் கடந்த 04-06-2016 அன்று திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவே விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் காலையில் மரணமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியவர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மவாட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க. திருலோகமூர்த்தி ஆகியோர் ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து உடல் யாழ் போதான வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு ஞாயிறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு சிகிசையின் பின்னர் ஓரளவு சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நோயாளி அன்றிரவு இரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியசாலை அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்களிடம் கேட்ட போது..

“வைத்தியசாலையின் பெண் பரிசாதகர் வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு மூளைக் காச்சலுக்கான சிகிசை அளிக்கப்பட்டு, நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு உடல் யாழ் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.

இதேNவைள வைத்தியசாலையின் கவனயீனமும் காரணமா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே உடற் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பான உண்மை நிலைமையை தெரியப்படுத்துவதாகவும்” குறிப்பிட்ட அவர்,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் உள்பட 5 பேர் கைது..!!
Next post கொழும்பு ராணுவ கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து.. ஆயுதங்கள் வெடித்துச் சிதறின.. மக்கள் ஓட்டம்…!!