மகனை காப்பாற்ற துப்பாக்கி முன் பாய்ந்து உயிர் தியாகம் செய்த தாய்! நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

Read Time:4 Minute, 42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)அமெரிக்காவின் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ஆர்லாண்டோவில் உள்ள “பல்ஸ்” ஓரின சேர்க்கையாளர் விடுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன் என்பவர் சரமாரியாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் எட்டி ஜஸ்டீஸ், இறக்கும் தருவாயில், ‘I’m gonna die’… என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்வடையச் செய்த நிலையில், தற்போது,விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது தனது மகனை காப்பதற்காக துப்பாக்கி முன் பாய்ந்து தாய் ஒருவர் உயிரை விட்டுள்ளார். இந்த நெஞ்சை உருக்கும் தியாகம் தற்போது தெரியவந்துள்ளது.

நியூயார்க்கை சேர்ந்த பிரெண்டா லீ மார்க்யூஸ் மெக்கூலுக்கு 11 குழந்தைகள். 49 வயதான மெக்கூல், தனது பிள்ளைகளுடன் வசிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து ஆர்லாண்டோவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மெக்கூல், புகழ்பெற்ற சல்சா நடனமாடுவதற்காக இரவு விடுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மெக்கூல்லின் இளைய மகன் இசைஹா ஓரின சேர்க்கையாளர் என கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கடந்த 12ம் தேதி அன்று தனது 21 வயது மகன் இசைஹா ஹெண்டர்சனுடன் நடனமாட ‘பல்ஸ்’ ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதிக்கு சென்றுள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் நியூயார்க் நகரில் நடைபெறும் “Puerto Rican Day Parade” எனும் அணிவகுப்புக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த மெக்கூல் இந்த ஆண்டு ஆர்லாண்டோவில் மகனுடன் இருக்க முடிவெடுத்துள்ளார்.

கடந்த 11ம் தேதி நள்ளிரவு இரவு விடுதிக்கு மகனுடன் சென்றிருந்த மெக்கூல், தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக தனது நண்பர்கள் சல்சா நடனமாடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.

இந்நிலையில், விடுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த உமர் மாட்டீன், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அப்போது, விடுதியில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.

மெக்கூலின் மகன் இசைஹாவை நோக்கி குறிவைத்து உமர் மாட்டீன் சுட முயற்சி செய்த போது, அவருக்கு முன்பாக பாய்ந்த மெக்கூல், “கீழே படு” (Get down) எனக்கூறி மகனை காப்பாற்றியதுடன், உமர் மாட்டீனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

புற்றுநோய்க்கு தான் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்பதால், நான் உயிரிழந்தால் நீங்கள் அதற்காக வருத்தப்படக்கூடாது. முடிந்தால் அதனையும் கொண்டாடுங்கள் என்றே மெக்கூல் கூறி வந்ததாக அவரது மகன்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்தநாள் விழாவில் நடந்த இரட்டை கொலையில் வாலிபர் சிக்கினார்: தலைமறைவு கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு…!!
Next post கேகாலை – அரநாயக்க மண்சரிவில் சிக்கிய மூவரது சடலங்கள் மீட்பு…!!