மணப்பெண் உடையில் வந்து மாணவனிடம் காதலை தெரிவித்த ஆசிரியை…!! Photo

Read Time:3 Minute, 20 Second

wedding_student_002.w540பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யை­யொ­ருவர், மணப் பெண் ஆடை அணிந்­த­வாறு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் முன்­னி­லையில் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வ­ரிடம் அவரைத் திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யிட்டு அவைரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம் சீனாவில் ஹுனான் மாகா­ணத்தில் இடம் பெற்றுள்ளது.

சங்டி நக­ரி­லுள்ள ஹுனான் கலை மற்றும் விஞ்­ஞான பல்­க­லைக்­க­ழ­கத்தில் தற்­கா­லிக விரிவுரையா­ள­ராக கட­மை­யாற்­றும் ஹு என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் குறிப்­பிட்ட ஆசி­ரியை அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அடிக்­கடி விஜயம் செய்து மாண­வர்­க­ளுக்கு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் உரை­யாற்­று­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் ஏற்­க­னவே திரு­ம­ண­மாகி விவா­க­ரத்துப் பெற்­றி­ருந்த அவர், 4 மாதங்­க­ளுக்கு முன் பல்­க­லைக்­க­ழக வகுப்­பொன்றில் தன்னை விடவும் 10 வயது இள­மை­யான பெயர் வெளியிடப்படாத குறிப்­பிட்ட மாண­வரை முதன் முத­லாக சந்­தித்தார்.

முதல் சந்­திப்­பி­லேயே அந்த மாணவர் பால் ஈர்க்­கப்­பட்ட ஹு, அவ­ரிடம் தனது திரு­மணம் செய்வதற்­கான விருப்­பத்தை புது­மை­யான வழி­மு­றையைக் கையாண்டு வெளி­யிடத் திட்டமிட்டார்.

அவர் அந்தப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை மணப்பெண் தோழிகள் மற்றும் மண­மகன் தோழர்கள் போன்று ஆடை அணிந்து வரச் செய்து அவர்கள் மத்­தியில் திரு­மண ஆடையும் முகமூடியும் அணிந்­த­வாறு தோன்றி தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை மாண­வ­ரிடம் அவர் வெளி­யிட்டார். இன்ப அதிர்ச்­சிக்­குள்­ளான அந்த மாணவர் உடனே ஹுவின் விருப்­பத்தை ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பில் மேற்­படி மாணவர் விப­ரிக்­கையில், தன்னை விடவும் ஹு 10 வயதால் மூத்­தவர் என்­பதை தான் ஒரு பொருட்­டாகக் கரு­த­வில்லை என தெரி­வித்­துள்ளார்.

இன்னும் சில வாரங்­களில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெற­வுள்ள அவர், தொழில் ஒன்றைப் பெறு­வ­தற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதன் பின் ஹுவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். அவரது திருமணத்திற்கு அவரது பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

wedding_student_005.w540

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் விவகாரம்: நடுவீதியில் இரு இளைஞர்களுக்கு கத்திக்குத்து…!! வீடியோ
Next post மனிதரை பதுங்கி தாக்க வந்த கரும்புலி: இறுதியில் காத்திருந்த சுவாரஸ்யம்…!! வீடியோ