ஹம்பாந்தோட்டையில் வனஅதிகாரி கொலை…!!
ஹம்பாந்தோட்டை வல்சபுகல என்ற வனப்பகுதியில் வனபாதுகாப்பு அதிகாரி ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
விலங்கு வேட்டையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை கைதுசெய்யசெல்லும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.