கல்லடி பாலத்தில் குதித்த இளைஞனின் சடலம் மீட்பு…!!
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலம் மூன்று நாட்களின் பின்னர் இன்று (05) காலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கிஷோர் என்ற இளைஞர் நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவருடைய சடலம் கடந்த மூன்று நாட்களாக தேடியும் கிடைக்கப்பெறாத நிலையில் மேற்படி இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு வாவியோரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சடலம் பிரேதப்பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.