ஓடும் பஸ்சில் பெண் பயணியை கற்பழித்து ரோட்டில் வீசிய டிரைவர் கைது…!!
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு வெளியே தூக்கி வீசப்பட்டார். பின்னர் மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது போல் திரிபுராவில் ஓடும் பஸ்சில் பெண் பயணி கற்பழிக்கப்பட்டு வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திரிபுரா மாநிலம் துப் தோலீயை சேர்ந்த 20 வயது இளம்பெண் தெற்கு திரிபுராவில் உள்ள பெலோனியா என்ற இடத்தில் இருந்து தனது சொந்த ஊரான துப்தோலி செல்வதற்காக தனியார் பஸ்சில் நேற்று மாலை 5 மணிக்கு பயணம் செய்தார்.
எகின்பூர் என்ற இடம் வந்த போது பயணிகள் அனைவரும் இறங்கி விட்டனர். அந்த இளம்பெண் மட்டும் இருந்தார். ஒருவருக்காக மட்டும் பஸ் தொடர்ந்து செல்லாது என்று டிரைவர் கூறி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் டிரைவரிடம் சென்று சொந்த ஊரில் இறக்கி விடுமாறு கெஞ்சி கேட்டுக்கொண்டார்.
இதற்கு டிரைவர் சம்மதித்தார். பஸ்சை கிளீனரை ஓட்டச்சொன்னார். டிரைவர் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஒரு கிராமத்தின் அருகே சென்ற போது திடீர் என்று டிரைவர் பெண்ணிடம் சென்று அருகில் அமர்ந்து கொண்டு வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னர் ஓடும் பஸ்சில் இருந்து பெண்ணை வெளியே தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதற்கிடையே அந்த வழியாக சென்றவர்கள் குற்றுயிராக கிடந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு அந்தப் பெண் நடந்த விவரங்களை போலீசில் தெரிவித்து புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து டிரைவர் பரிமல் தேப்நாத்தை கைது செய்து சிறையில் அடைந்தனர்.