சற்று முன் வந்தடைந்தார் வென் சி…!!
சீன வௌிவிவகார அமைச்சர் வென் சி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்று மாலை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வென் சிக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கும் சீன அமைச்சர் வென் சி நாளை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் தாயகம் திரும்புவார் எனவும் வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.