இலங்கை விஜயம் செய்யவுள்ள நிஸா…!!

Read Time:1 Minute, 54 Second

index-82தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் வாரம் 13 ஆம் திகதி அளவில் இலங்கை விஜயம் செய்யவுள்ள நிஸா பிஸ்வாலுடன், தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் மன்பிரட் சிங்கும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் 13 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நல்லாட்சி அரசு ஏற்பட்ட பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வ விஜயமாகவும் கடந்த டிசம்பர் மாதம் விடுமுறையைக் கழிப்பதற்காக ஸ்ரீலங்காவிற்கு நிஸா பிஸ்வால் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

நிஸா பிஸ்வால் மற்றும் மன்பிரட் சிங் ஆகிய இருவரும் இலங்கை வருவதற்கு முன்னர் பங்களாதேஷூக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியர்கள் இன்மையால் அவதியுறும் மக்கள்…!!
Next post யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி…!!