புற்றுநோயால் உயிரிழக்கபோகும் செல்ல நாய்க்கு நாட்டை சுற்றி காட்டிய அமெரிக்கர்..!!

Read Time:2 Minute, 8 Second

201607161206376749_Americans-will-die-from-cancer-go-to-the-dog-shows-around_SECVPFஅமெரிக்காவில் நெப் ராஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் குக்லர். இவர் லாப் ரடார் என்ற நாயை வளர்த்து வந்தார். 3 கால்கள் கொண்ட அந்த நாயை செல்லமாக பராமரித்து வந்தார்.

அந்த நாய்க்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. அதை பரிசோதித்த டாக்டர் நாய் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்நோய் வேகமாக பரவி வருவதாகவும். இன்னும் அதிக பட்சமாக 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே நாய் உயிர்வாழும் என்றும் தெரிவித்தார்.

இதை கேட்டு ராபர்ட் குக்லர் மனம் உடைந்தார். எனவே செல்லமாக வளர்க்கும் தனது நெருங்கிய நாய் நண்பனுக்கு கடைசியாக அமெரிக்காவை சுற்றிக் காட்ட முடிவு செய்தார்.

அதன் படி லாப்ரடார் நாயை டெட்ராய்ட், கென்டக்கி, ஒகியோ மற்றும் சூரியன் மறையும் நயாகரா நீர்வீழ்ச்சி, நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நியூயார்க் அடிரான்ட்க் மலைகள் உள்ளிட்ட பல பகுதிகளை சுற்றிக் காட்டினார்.

இது குறித்து ராபர்ட் குக்லர் கூறும் போது, ஒரு நாள் நான் வீட்டிற்கு வரும் போது செல்லமாக வளர்த்த நாய் இறந்து கிடப்பதை பார்க்க விரும்பவில்லை.

அதை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை என்றார். மேலும் சுற்றுலா சென்ற போது ஒவ்வொரு இடங்களிலும் தனது நாய் நண்பனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலை தளங்களில் பிரசுரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடுமலை ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவன் பலி..!!
Next post திருமணமான புதிதில் இந்த 2 விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்…!!