காதலன் கொடுத்த ஒரு முத்தத்தில், சுருண்டு விழுந்து இறந்த பெண்…!!

Read Time:3 Minute, 47 Second

lover_kiss_002.w540கனடாவின் ஷெர்புரூக் பகுதியை சேர்ந்தவர் மிரியம் (Myriam Ducré-Lemay). இவர் கடந்த அக்டோபர் 2012-ல் தனது இருபது வயதில் மரணமடைந்தார். இவர் எப்படி இறந்தார், எதனால் இறந்தார் என்பது தான் பலரையும் வியப்படைய வைக்கிறது.

ஆம், ஒரு முத்தால் காதல் மலரலாம், ஏன் இருவர் மத்தியில் இச்சை உணர்வை தூண்ட கூட முத்தம் உதவும். ஆனால், ஒருவரது உயிரை முத்தால் பறிக்க முடியுமா? அபூர்வம் என்றாலும், தன் மகளுக்கு நடந்த சோகத்தை பற்றி சமீபத்தில் தான் இறந்த மரியம் அவரது தாய் கூறியுள்ளார்.

பார்ட்டி!

ஒரு நாள் மரியம் மற்றும் அவரது காதலர் இருவரும் இரவு பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். காதலனுடன் மரியம் மிகவும் நெருக்கமாக இருந்த காலம் அது என மரியத்தின் தாய் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

காதலை கூறினார்…

ஓர்நாள் தன் தாயிடம் மரியம் தனது காதலை பற்றி கூறியுள்ளார். தன் மகளை அப்போது தான் மிகவும் பிரகாசமான முகத்துடன் கண்டேன். காதலை கூறிவிட்டு காதலனுடன், அவனது வீட்டுக்கு சென்றாள்.

முத்தம்!

காதலனின் வீட்டில் முத்தமிட்டுக் கொண்டிருந்த போதே ஒருமாதிரி உணர்துள்ளர் மரியம். சற்று மூச்சு திணறல் ஏற்படுவது போல உணர்ந்த மரியம் இன்ஹேலர் பயன்படுத்தியுள்ளார்.

பீனட்(Peanut)

பிறகு தன் காதலனிடம் பீனட் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். மரியத்தின் காதலர், சான்வேட்ஜ் பீனட் பட்டர் தான் இருக்கிறது என தந்துள்ளார். அதை உண்ட சிறிது நேரத்தில் மரியம் உயிரிழந்துவிட்டார்.

பெருமூளை ஆக்ஸிஜன்!

மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாததால் தான் இறந்துள்ளார் மரியம். அவர் இறப்பதற்கு காரணமாக இருந்தது பெருமூளை செல்லும் ஆக்ஸிஜன் தடைப்பட்டது தான் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பீனட் அலர்ஜி! (Peanut)

மரியத்திற்கு சிறு வயதில் இருந்தே பீனட் அலர்ஜி இருந்துள்ளது. இதை பற்றி மரியம் தனது காதலனிடம் கூறியதில்லை. மரியம் தடுமாறுவதை உணர்த மரியத்தின் காதலன், ஆம்புலன்ஸ் அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னர் சி.பி.ஆர்-ம் முயற்சி செய்துள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே, மரியம் இறந்துவிட்டார்.

பீனட் அலர்ஜி என்பது மேற்கத்திய நாடுகளில் ஐந்து ஒருவருக்கு இருப்பதாகவும். குழந்தை வயதில் இருந்தே இது நிலவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. மரியத்தின் மரணத்திற்கு இதுதான் காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த அலர்ஜி குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் என்று தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தன் மகளின் மரணத்தை பற்றி பேசியுள்ளார் மரியத்தின் தாய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புளுமெண்டல் பகுதியில் தீ விபத்து…!!
Next post ஒரு மனுஷனை கை தனியா கால் தனியா இப்படி பிச்சிட்டாங்களே..!! வீடியோ