நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்…!!

Read Time:2 Minute, 5 Second

lankabbc-66நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 6
எலுமிச்சை சிறியது – 1,
தேன் – தேவையான அளவு,
இஞ்சி – சிறிதளவு,
ஐஸ் கியூப்ஸ் – தேவைக்கு

செய்முறை:

* நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எலுமிச்சைச்சாறு, தேன், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

* பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் சுற்றவும்.

* அரைத்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேன், ஐஸ் கியூப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

பலன்கள்:

நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான மண்டலத்துக்கு மிகவும் நல்லது.

சளிப்பிடிக்கும் என நினைப்பவர்கள், மஞ்சள் தூள் சேர்த்து இந்த ஜூஸ் அருந்தலாம். குழந்தைகளுக்குத் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரப்பான் பூச்சியிலிருந்து பால் : எருமை பாலை விட 3 மடங்கு புரதம் அதிகமாம்..!!
Next post தமிழ் பெண்ணின் அட்டகாசமான நடனம்… நடனம்னா இது நடனம்…!! வீடியோ