மும்பையில் மலேரியா காய்ச்சலுக்கு 583 பேர் பாதிப்பு…!!

Read Time:2 Minute, 15 Second

201608040844209382_583-people-affected-with-malaria-in-Mumbai_SECVPFமும்பையில் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பலரும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மலேரியா காய்ச்சலுக்கு மட்டும் 583 பேர் பாதிக்கப்பட்டு மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக மஞ்சள் காமாலை நோயால் 135 பேரும், எலிக்காய்ச்சலுக்கு 76 பேரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

நகரில் 63 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து மாநகராட்சி மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தண்ணீரினாலேயே இந்த நோய்கள் பரவுகின்றன. எனவே பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும். தேங்கி நிற்கும் மழை நீரில் மிதிக்க கூட விடக்கூடாது. சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாவதை தடுக்க முடியும். காய்ச்சல் ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்” என்றார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்..!!
Next post கொடைக்கானலில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை…!!