8 நிமிடங்களுக்குள் கொடியை பார்த்து 224 நாடுகளின் பெயரை சொல்லும் 3 வயது குழந்தை…!!

Read Time:4 Minute, 7 Second

201608071613505928_8-minutes-looking-at-the-flag-224-countries-will-tell-the_SECVPFநமது தேசிய கொடியில் மேல் பகுதியில் சிவப்பு வருமா? பச்சை வருமா? என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும்.

இத்தனைக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் தேசிய கொடியின் கீழ் நின்று தாயின் மணிக்கொடி பாரீர்… என்று தினமும் பாடியவர்கள் தான்.

ஆனால் ஒரு பச்சிளம் குழந்தை 224 நாடுகளின் கொடியை பார்த்து நாட்டின் பெயரை பளிச்… பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?

அந்த குழந்தையின் பெயர் லஸ்யபிரியா. 3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1 மாதம் இருக்கிறது.

இந்த லஸ்ய பிரியா உண்மையிலேயே அதிசய பிரியா தான்.

சென்னை பெரவள்ளூர் சக்திவேல் நகரில் வசிக்கும் லஸ்யபிரியாவின் பெற்றோர் சந்தோஷ்- சாதனாவின் லட்சியம் எப்படியாவது தன் பிள்ளையை கின்னஸ் சாதனைக்கு தயார்படுத்த வேண்டும் என்பது தான்.

அதன் காரணமாகவே கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு குடும்பத் தலைவியாக இருக்கும் சாதனா தனது குழந்தைக்கு பயிற்சி அளிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்.

கொடிகள் மீதான நாட்டத்தை புரிந்து கொண்டு 255 நாடுகளின் கொடிகளையும் சேகரித்தனர். ஒவ்வொரு கொடியையும் காட்டி அந்த நாட்டின் பெயரை சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு தினம் 5 கொடிகள் வீதம் பயிற்சி அளித்துள்ளனர். இப்போது 224 நாடுகளின் கொடிகளை பார்த்து அந்த நாட்டின் பெயரை கட கட வென்று சொல்லிவிடுகிறார்.

குழப்பி கேட்டாலும் அவள் எந்த குழப்பமும் இல்லாமல் கொடியை பார்த்து சட்டென்று சொல்லிவிடுகிறாள்.

8 நிமிடத்தில் 224 நாடுகளையும் சொல்லிவிடுகிறாள்.

இன்னும் மழலை சொல் மாறாத பேச்சு. அவளுக்கே உரித்தான அந்த மொழியில் தான் நாடுகளின் பெயர்களை சொல்கிறாள்.

மீதி 31 நாடுகளின் பெயர்கள் பெரியவர்கள் வாயில் கூட நுழையாத கடினமான பெயர்கள். எனவே அந்த பெயர்களை பிரியாவால் சொல்ல முடியவில்லை.

5 வயது சிறுவன் 5 நிமிடங்களில் 221 நாடுகளின் பெயரை சொன்னது தான் இதுவரை சாதனையாக இருக்கிறது. எங்கள் பிரியாவுக்கு 3 வயது தான் ஆகிறது. ஆனால் 224 நாடுகளின் பெயர்களை சொல்கிறாள். எப்படியாவது அவள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.

இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள 30 மாநிலங்களின் தலை நகரங்களையும் பிரியா சொல்கிறாள் என்றார்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியும், அறிவாற்றலும் அதிகம் என்பார்கள். லஸ்யபிரியாவும் அதை நிரூபித்து வருகிறாள்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பால்குடி மறக்காத குழந்தைக்கு பீர் கொடுக்கும் தந்தை…!!
Next post வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் இருந்து பாய்ந்து நோயாளி உயிரிழப்பு..!!