தண்ணீரில் ஓடும் அதிசய பைக்!… லிற்றருக்கு எத்தனை கிலோ மீற்றர்னு தெரியுமா? வீடியோ

Read Time:2 Minute, 27 Second

water_bike_002.w540பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் ஒரு லிற்றர் தண்ணீரில் 500 கிலோமீற்றர் வரை செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் சாவ்பாலோ நகரை சேர்ந்தவர் ரிக்கேர்டே ஆஸேவெடே. தற்போது உள்ள இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் உபயோகப்படுத்துவதால், அதில் நச்சுத்தன்மை வெளிப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதன் காரணமாக அவர் தண்ணிர் ஊற்றினால் போதும் தங்குதடையின்றி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அளவிற்கு புதிய வகை மோட்டர் சைக்கிளை கண்டுபிடித்துள்ளார்.

அதன் செயல்பாடு குறித்து அவர் கூறியதாவது, இதற்கு T Power H20 என்று பெயர் வைத்துள்ளேன். இந்த மோட்டார்சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தின் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன் மூலம் உந்துசக்தி காற்றை கிழித்துக்கொண்டு பறக்கும், மேலும் இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிற்றர் தண்ணீரில் சுமார் 500 கிலோ மீற்றர் வரைசெல்லும் என்று கூறி அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் காட்டியுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு ; பிரேத பரிசோதனை வெளியானது…!!
Next post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-10)