கொட்டாஞ்சேனை மரணங்களின் மர்மம் தொடர்கிறது! உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்கு…!!

Read Time:5 Minute, 9 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)கொட்டாஞ்சேனை, சென்.பெனடிக் மாவத்தை – 70ம் இலக்க தோட்டத்தில் வீடொன்றிலிருந்து உயிரிழந்திருந்த நிலை யில் மீட்கப்பட்ட தந்தை,மகள் மற்றும் மகன் ஆகியோரின் மரணத்தின் மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது.

இது தொடர்பில் பல்கோண விசாரணை களை கொட்டாஞ்சேனை பொலிஸார் மற் றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த மூவரினதும் மர்ம மரணம்குறித்த தகவல்களை இரசாயன பகுப்பாய்வு அறிக் கையைத் தொடர்ந்துவெளிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் தடயவியல் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட மென் பான பக்கற்றின் மாதிரிகள் மற்றும் உயிரிழந்த மூவரும் இறுதியாக உட்கொண்டதாக நம்பப்படும் காலை நேர உணவின் மாதிரிகள் ஆகியன அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்ப்ட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என நம்புவதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சட்ட வைத்திய பரிசோதனைகளின் போதும் மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படாத நிலையிலும் சடலங்களின் பாகங்கள் சில மேலதிக ஆய்வுக்காக எடுக்கப்பட்டு இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவற்றின் அறிக்கை கிடைக்கப் பெறும் வரையில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள மேலும் சில முக்கிய விடயங்களை மையப்படுத்தி தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, கொழும்பு வடக்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லயனல் குணதிலக ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலகவின் ஆலோசனைக்கு அமைய கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி சில்வாவின் தலமையில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளியன்று மதிய நேரம் வாசுதேவன் சிவகுமார் (வயது 46),ததர்ஷினி (வயது 12), நவீன் அல்லது நவித்ரன் (வயது 9) ஆகியோர் தமது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளின் படி, முதலில் குறித்த மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளதாகவே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் விசாரணைகளின் சாட்சியங்களுக்கு அமைவாக அதனை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இல்லை எனவும் தெரிவித்தனர்.

தாய் பாடசாலைக்கு சென்று மீளவும் வீடு திரும்பியுள்ள நேரத்துக்குள் மகன் தாய்க்கு தந்தையின் தொலைபேசியில் இருந்து தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துள்ளதாகவும் இதன் போது மகன் பேசுவது தாய்க்கு சரியாக கேட்காமை காரணமாக அவ்வழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பிலும் தற்போதைய விசாரணையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-11)
Next post கிளிநொச்சியில் வெடிக்கும் நிலையில் குண்டுகள்..!!