மராட்டியத்தில் மழைக்கு 64 பேர் பலி: 1.5 லட்சம் பேர் வெளியேற்றம்;ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து

Read Time:4 Minute, 2 Second

Mumbai-Vellam.jpgமராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திராவில் பலத்த மழையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழையால் மும்பை நகரம் 3-வது நாளாக தத்தளிக்கிறது. மின்சார ரெயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் உள்ள புல்தானா, ஜால்னா, ஹிங்கோலி, நான்டட், யாத்வாமல் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளன. நாசிக் நகரமும் மழையால் சிக்கி தவிக்கிறது.

மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் உள்ள 685 கிராமங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி உள்ளது. அங்குள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

50லட்சம் ஏக்கர் விவசாய பயிர் வெள்ளத்தால் நாசமானது. மழைக்கு இதுவரை 69பேர் பலியாகி உள்ளதாக மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.

வெள்ள நிவாரணம் குறித்து மராட்டிய மந்திரி சபை இன்று ஆலோசனை நடத்துகிறது. வெள்ளம் பாதித்த அவுரங்கபாத் பகுதிகளை முதல்-மந்திரி நேற்று பார்வையிட்டார்.

பலத்த மழையால் குஜராத்தின் தெற்கு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சூரத் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கிருந்த 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திராவுக்கு புதிய புயல் ஆபத்து

வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் ஆந்திராவில் வடக்குபகுதி மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஏரி, குளங்கள் உடைந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் பலியானார்கள்.

இந்த நிலையில் கொல்கத்தா, வானிலை மைய அதிகாரி ஜே.வி.எம்.நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

சிலநாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை யானது. புயலாக மாறி ஆந்திராவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆந்திராவையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதியதாக ஒரு காற்ற ழுத்த தாழ்வு நிலை உரு வாகியுள்ளது. அது புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. இன்னும் 4 நாட்களுக்கு அந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளை தாக்கும்.

கடந்த புயலை விட இந்த புதிய புயல் அதிக வேகத்தில் கரையை கடக்க வாய்ப்பிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
Mumbai-Vellam.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லெபனான் கை ஓங்குகிறது: ஏவுகணை வீச்சில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலி
Next post சீனாவில், உளவாளியின் மரணதண்டனை வீடியோ படம்