பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்…!!

Read Time:6 Minute, 9 Second

solution-various-health-problems-sugar-apple_secvpf-585x333இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும்.

சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். பித்தம் அகற்றி, இரத்தத்தை விருத்தி செய்யும். நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கம் தூண்டி சருமத்தை நன்கு இயல்பு நிலையில் பராமரிக்கும்.
100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3 கிராம், கால்சியம் 17 மில்லிகிராம், பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்புச் சத்து 1.5 மி.கி., மெக்னீசியம் 48 மி.கி., பொட்டாசியம் 34 மி.கி., தாமிரம் 0.52 மி.கி., குளோரின் 3.7 மி.கி., தயாமின் 0.07மி.கி., ரைபோஃபிளோவின் 0.20 மி.கி., நியாசின் 1.3 மி.கி., வைட்டமின் ‘சி’ 37 மி.கி., ஆக்சாலிக் அமிலம் 30 மி.கி., சக்தி 104 கலோரிகள்.

சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தைத் சாப்பிடுவோம். இதயத்தைக் காப்போம்.

* ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.

* சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். கோடை உபாதைகள் எட்டிப் பார்க்காது.

* அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.

* மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விடும்.

* சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.

* உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை கணிசமாக குறையும்.

* சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும்.

* இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.

* சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்.

* இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் தின்றால், நன்கு தூக்கம் வரும். தூக்கம் வராது அவதிப்படுபவர்களுக்கு, இது ஒரு நல்ல எளிய இயற்கை மருந்து.

* அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படுபவர்கள், சீதாப்பழம் தின்று வர, தசைகளை சீராக இயங்கச் செய்யும்.

* சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.

* சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது தடுக்கும் தன்மையை உண்டாக்கும். சளிப் பிடித்தவர்கள், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நன்கு சளி குணமாகி நலன் கிட்டும்.

* சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்டிரால் சேராது காக்கும்.

* சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

* சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.

* சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாத்தளையில் 6 மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை…!!
Next post சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை: அனுஷ்கா…!!