தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பள்ளேகொட வீட்டுத்தோட்ட திருத்தப்பணிகள் மந்தகதியில்…!!

Read Time:3 Minute, 54 Second

fire-damaged-propertyமத்துகம, பள்ளேகொட தோட்டம் மேற்பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் சேதமுற்ற பத்து லயன் குடியிருப்புகளுக்கு மாற்று வீடுகளை அமைத்துக் கொடுக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டம் மந்த கதியில் இடம் பெற்று வருவது குறித்து பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் மிகுந்த அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 22 ஆம் திகதி தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைத்து மூன்று மாத காலத்துள் வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கையளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி சேதமுற்ற லயன் குடியிருப்புக்கள் தரைமட்டமாக்கப்பட்டு தலா ஏழு பேர்ச் காணி ஒதுக்கப்பட்டு ட்ரஸ்ட் நிறுவனத்தினால் வீட்டுத் திட்டத்துக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மூன்று மாதங்கள் கடந்தும் மந்த கதியிலேயே இடம் பெற்று வருகின்றது.

கடந்த மூன்று மாத காலத்துக்கு மேலாக லயன் குடியிருப்புக்களைப் போன்று அடுத்தடுத்து வரிசையாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே பொழுதைக் கழித்து வருகின்றனர்.

எனவே அமைச்சர் பீ.திகாம்பரம் இது குறித்து கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரை வழங்கி வீட்டுத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த காலத்தில் ட்ரஸ்ட் நிறுவனத்தினால் களுத்துறை மாவட்டத்தின் கீக்கியனகந்த, எல்லகந்த, என்டர்சன் மற்றும் தோட்டங்களில் தரக்குறைவாகவும்ம், அரைகுறையாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளைப் போல் அல்லாது தரமானதாகவும், உறுதியானதாகவும் முழுமையாகப் பூர்த்தி செய்து தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அமைக்கப்பட்டு வரும் ஒவ்வொரு வீடும் 550 சதுர அடியில் ஒரு வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள், சமையலறை அதனுடன் ஒட்டிய மலசலகூடம், மின்சாரம், குடிநீர் வசதிகள் உட்பட ஆறரை லட்சம் ரூபா செலவில் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரஹரவின் போது யானை குழப்பம் : பெண் ஒருவர் பலி : 11 பேர் காயம்…!!
Next post பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு…!!