அழகான கண் இமை வேண்டுமா?… இதை ட்ரை பண்ணுங்க….!!

Read Time:6 Minute, 2 Second

eye_brow_001-w245அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையிரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தடிமனாகவும் கருமையாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக காட்சியளிக்கும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அழகு சாதனங்களை கொண்டு உங்கள் கண் இமை ரோமங்களை தடிமனாக மாற்றலாம். அதேபோல் அதற்கு சில இயற்கையான வழி முறைகளும் இருக்கத் தான் செய்கிறது.

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க…

மஸ்காரா பயன்படுத்துங்கள்

வெளியே டேட்டிங் அல்லது ஏதாவது பார்ட்டிக்கு செல்வதால் உடனடியாக தடிமனான கண் இமை ரோமங்களை பெற வேண்டுமா? அப்படியானால் நல்ல மஸ்காராவை பயன்படுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப்ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா.

திறம்பட செயலாற்றும் இது புகழ்பெற்ற வழி முறையாக விளங்குகிறது. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள்.

செயற்கை இமை ரோமங்கள்

நீளமான தடிமனான கண் இமை ரோமங்களின் மீது ஆவலாக உள்ளதா? அப்படியானால் கண்களுக்கு கொஞ்சம் நீட்சியை பயன்படுத்தலாம்; அது தான் செயற்கை இமை ரோமங்கள். இவைகள் பார்ப்பதற்கு செயற்கையானது தான் என்பதை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நீண்ட தடிமனான கண் இமை ரோமங்களின் மீது அதீத காதல் கொண்டிருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். கண் இமை ரோமங்களை உடனடியாக தடியாக்க இதுவும் சிறந்த வழியாக விளங்குகிறது. இந்த செயற்கை இமை ரோமங்கள் அனைத்து அழகு சாதன கடைகளில் கிடைக்கும். மேலும் பல வகைகளிலும் கிடைக்கும். பெண்கள் பரவலாக பயன்படுத்தும் முறை இது.

மாய்ஸ்சுரைஸ்

கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துட ன் வைக்க வாஸ்லின் பயன்படுத்துங்கள். இதனால் அவைகள் இயற்கையாகவே தடிமனாகவும், கருமையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக்அப் செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோமங்களை தடியாக்கும்.

எண்ணெய்கள்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமை ரோமன்களுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமை ரோமங்களில்உள்ள மயிரடி நரம்பிழைகளை தூண்டிவிடும் இந்த எண்ணெய்கள். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்ய வேண்டும்.

உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. அதனால் கண் இமை ரோமங்களின் வளர்ச்சி தானாகவே மேம்படும். கண் இமை ரோமங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமு றையாகும். இந்த வழி முறை செயல்பட நீண்ட காலமாகும். அதனால் உங்களுக்கு பொறுமை தேவைப்படும். ஆனால் அழகு சாதனங்கள் இல் லாமல் இயற்கையாகவே தீர்வு கிடைக்கும் போது காத்திருப்பதில் ஒன்றும் தவறில்லையே.

கண்களை கசக்குவதை நிறுத்துங்கள்

நம் அனைவருக்கும் கண் இமைகளை கசக்கும் பழக்கம் இருக்குமல்லவா? அப்படி செய்யும் போது உங்கள் கண் இமை ரோமங்கள் உடைந்து உதிரவும் செய்யும். இது கண் இமை ரோமங்களின் தடிமானத்தை குறைத்து விடும். அதனால் எப்போதும்இருப்பதைவிட இன்னமும் மெலிதாக போய்விடும். இதனை தவிர்க்க கண் இமைகளை அடிக்கடி கசக்காதீர்கள். தடியான கண்இமை ரோமங்களை பெறுவதற்கு நீங்கள் செய்ய கூடாத அழகு டிப்ஸ்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள்…!!
Next post செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கிக்கொடுத்த தொழிலதிபர் மகன்…!!