தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு காய்ச்சல்…!!

Read Time:2 Minute, 24 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தில் தெள்ளு பூச்சி கடியால் பாதிக்கப்பட்ட 260 மாணவிகளில் சில மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஹற்றன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மகளிர் வித்தியாலயத்தில் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ மற்றும் தரம் 5 ஏ.பீ ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர் தர கலை பிரிவு மாணவிகள் கற்கும் வகுப்பிலும் தெள்ளு பூச்சிகள் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்மாணவிகளின் வகுப்பறைகள் மாற்றம் செய்யப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக 27.09.2016 அன்று முதல் இரண்டு தினங்களுக்கு குறித்த வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 28.09.2016 அன்று புதன்கிழமை காலை பொது சுகாதார பரிசோதகர் ஊடாக தெள்ளு பூச்சிகள் அழிக்கும் பணிகளிலும் ஈடுபட போவதாகவும், பூரண சுகாதார பரிசோதனையின் பின் மீண்டும் குறித்த வகுப்பறைகள் இயங்கப்படும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனின் அடையாள அட்டையை வைத்திருந்ததால், சிக்கலில் மாட்டிய கமால் குணரத்ன!!: ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கோருகிறார் சரத்!! (VIDEO)
Next post கம்பளையில் நபர் ஒருவர் மாயம்…!!