சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!

Read Time:3 Minute, 19 Second

201609291316455389_26-still-missing-in-landslide-in-china_secvpfசீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயல் அதிகாலை சீனா மற்றும் தைவானை தாக்கியது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறை காற்று வீசியதுடன் பலத்த மழை கொட்டியது.

இதில் தைவான் நாட்டில் உள்ள ஹாலியன் கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மரங்கள் வேறோடு சாய்ந்தன. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

தைவானில் இந்த மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளனர்.

இது போல சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சீஜியாங் பிராந்தியம் முழுவதும் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இங்கு சுகுவான் என்ற இடத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது. இதில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த இடிபாட்டில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. நிலச்சரிவிலும் வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 41 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 15 பேரை மட்டும் இதுவரை மீட்டு உள்ளனர்.

26 பேர் இன்னும் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளனர். அவர்கள் உயிர் இழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புயல் மழையால் புசுகு நகரம் முற்றிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நகரில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரிலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

மழையினால் வீடு சேதம் அடைந்து 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் இந்த ஆண்டு ஏற்கனவே 16 புயல் தாக்கி இருந்தன. இப்போது தாக்கியிருப்பது 17-வது புயல் ஆகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பலி…!!
Next post சவுதிஅரேபியா சென்ற இங்கிலாந்து கப்பலில் தஞ்சை என்ஜினீயர் மர்ம சாவு…!!