By 30 September 2016 0 Comments

குழந்தைகள் குண்டா இருக்கணுமா?.. ஒல்லியா இருக்கனுமா?

baby_stoud_001-w245நானும் எதை எதையோ எல்லாம் சாப்பிடக் கொடுக்கின்றேன். ஆனாலும் குழந்தை கொழுகொழு என ஆகவே இல்லை என தினம் தினம் கவலைப்படும் அம்மாக்களா நீங்கள்….. கண்டிப்பாக இதையெல்லாம் படியுங்கள்.

குழந்தை ஓவர் குண்டாக இருப்பது அழகல்ல.. ஆபத்து. ஒல்லிக் குழந்தைதான் ஆரோக்கிய குழந்தை’ என்று நிரூபித்திருக்கிறது மருத்துவ உலகம்.

எனவே அம்மாக்களே….. கீழுள்ளவற்றை தினமும் கடைப்பிடியுங்கள். உங்கள் குழந்தைகளும் இனிமேல் ஆரோக்கியக் குழந்தைகளே….!

குழந்தையை பசும்பாலுக்குப் பழக்கப்படுத்தும் போது பாலில் சர்க்கரை போடுவதைத் தவிருங்கள். முக்கியமாக, கடைகளில் கிடைக்கிற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் எந்தச் சத்தும் இல்லை. தீமைதான் அதிகம். ‘ஒபிஸிடி’ ஏற்பட முக்கிய காரணமான ‘ஃப்ரக்டோஸ்’ என்ற பொருள் சர்க்கரையில் அதிகமாக உள்ளது.

சர்க்கரை போடாவிட்டால் குழந்தை எப்படி பாலைக் குடிக்கும் என்று கேட்கிறீர்களா? தாய்ப்பாலில் கூட இனிப்பு இல்லைதான். அதை குழந்தை விரும்பிக் குடிக்கிறதே! அதேபோல பசும் பாலையும் குடிக்கும். நீங்களாகத் தான் சர்க்கரை போட்டு குடிக்க வைத்துப் பழக்கப் படுத்துகிறீர்கள்.

சர்க்கரை போட்டுக் குடித்துப் பழகிய குழந்தையெனில், கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரையின் அளவைக் குறையுங்கள்.

குழந்தை சாப்பிடும்போது டி.வி. பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். டி.வி-யை பார்த்துக் கொண்டிருந்தால் உணவில் கவனம் இருக்காது. அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடும்.

குழந்தைக்குப் பசி எடுப்பதற்கு முன், சாப்பாட்டைப் போட்டுத் திணிக்கக் கூடாது. அதேபோல, அதற்குப் பசியெடுக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனி கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சரியாகத் தூங்காத குழந்தை குண்டாகும். இரவில் 7 மணிக்கெல்லாம் சாப்பிடவைத்து, 8 மணிக்கு பால், பழம் கொடுத்து, அரைமணி நேரம் கழித்து தூங்க வைத்துவிடுங்கள்.

தேநீர் குடிப்பதால் கிடைக்கிற உடலின் சக்தி சரியான முறையில் செலவிடப்படவேண்டும். இதற்கு குழந்தை தினமும் ஒரு மணி நேரமாவது ஓடி ஆடி விளையாட வேண்டும். நிறைய தூரம் நடக்க வேண்டும்.

ஃபாஸ்ட் ஃபுட், பீட்ஸா, பர்கர், சிப்ஸ், சாக்லெட், ஐஸ்கிரீம் இதெல்லாம் முழுக்க முழுக்க தேவையில்லாத கொழுப்புகள். இவை ‘எம்டீ கலோரிஸ்’ என அழைக்கப்படும். இவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித சக்தியும் கிடைப்பதில்லை. அடிக்கடி எம்டீ கலோரிஸ் பொருட்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு 14 வயதுக்குள்ளாகவே மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் ஏற்படுவதற் கான வாய்ப்பு இருக்கிறது. குழந்தை விரும்பினால் எப்போதாவது வாங்கித் தரலாம்.

இரண்டு வயதுவரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ‘ஒபிஸிடி’ ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால், குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுங்கள்.

புரோட்டீன் சக்திக்கு ஒரு பருப்பு வகை, கார்போஹைட்ரேட்டுக்கு அரிசி அல்லது கோதுமை, கொழுப்பு சக்திக்கு ஒரு ஸ்பூன் நெய், வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறையக் கிடைக்க காய்கறிகள், பழங்கள், இவற்றோடு 2 டம்ளர் பால், ஒரு கப் தயிர், ஒரு முட்டை.. இவை எல்லாம் தினமும் குழந்தையின் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை கீரை கொடுங்கள். இப்படி சரிவிகித உணவைச் சாப்பிடும் குழந்தைக்கு எடை அதிகரிக்காது.

வீட்டிலேயே முறுக்கு, தட்டை செய்து மாலை நேரங்களில் கொடுங்கள். நொறுக்குத் தீனிக்கு பதிலாக ரவை உப்புமா, அவல் உப்புமா, சுண்டல், பொட்டுக் கடலை, பேரீச்சை போன்றவற்றைக் கொடுங்கள். தானியக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி போன்றவற்றைக் கொடுப்பதும் மிக மிக நல்லது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.Post a Comment

Protected by WP Anti Spam