தீராத வயிற்றுவலியை தீர்க்கும் அருமருந்து…!!

Read Time:3 Minute, 51 Second

omam_002-615x463-585x440சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும்.

ஓமம், மிளகு வகை, 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன், 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும், 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

பசியைத் தூண்டி, சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி குடிக்கலாம்.

குடலிரைச்சல், இரைப்பை, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திரவம் என்ற மாபெரும் மருந்து, ஆதிகாலம் தொட்டு இருந்து வருகிறது.
குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திரவம்தான். ஓமத்திரவம் வீட்டில் இருந்தால், சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய் ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் காய்ச்சல் ஓடி விடும்.

தினமும், அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது.

வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
மூட்டு வலிக்கு ஓம எண்ணெய்யை தடவினால் நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.

ஓமப்பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்.

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாசிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமப்பொடி இரண்டு ஸ்பூன், இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும், நன்கு வெந்தவுடன் அப்படியே மூடிவைத்து விட வேண்டும்.

பின்னர், அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்..!!
Next post கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகள் நிறுத்தம்…!!