வரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும்! வளிமண்டலவியல் திணைக்களம்..!!

Read Time:1 Minute, 51 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை விரைவில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சியான காலநிலை எதிர்வரும் 13ம் திகதியுடன் மாற்றமடையும்.

13ம் திகதியின் பின்னர் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள், காலி மாத்தறை மாவட்டகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும்.

நாட்டில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வரட்சியினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

சுமார் ஏழு லட்சம் வரையிலான மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடிநீர் வசதியின்றி அல்லலுறுகின்றனர்.

போதியளவு மழை கிடைக்காத காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்…!!
Next post கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி – யாழில் சம்பவம்…!!