ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!

Read Time:2 Minute, 0 Second

201610102106227140_zika-likely-to-spread-in-asia-pacific-who_secvpfஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது.

இந்நிலையில், ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஜிகா போன்ற நுண் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சுகாதார நிறுவனம் தனது ஆண்டு அறிக்கையை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பெரும்பாலான தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசுபிக் தீவுகளில் இந்த நோய் பாதிக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகா நோய் பாதிப்பில் பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு இன்னும் ஆராய்ச்சியாளர்களால் பதில் அளிக்க முடியவில்லை.

சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒவ்வொரு நாட்டிலும் 20-க்கும் அதிகமானோர் பாதிகப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை : நான்கு பொலிஸாருக்கு பிடியாணை…!!
Next post 3 மாத கர்ப்பிணியான இணை நீதிபதியின் கொலையில் கணவர் கைது…!!