ரஜினியின் ‘2.ஓ’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 56 Second

201610150813048204_rajini-2pointo-teaser-release-date-announced_secvpfரஜினி நடிப்பில் மற்றொரு பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஏமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி, சென்னை மற்றும் வெளிநாடுகளில் மாறி மாறி நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வருகிற நவம்பர் 20-ந் தேதி இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்துள்ள படம் என்பதால் இப்படத்தில் கண்டிப்பாக பிரம்மாண்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரும் இப்படத்தில் வில்லனாக நடிப்பது படத்திற்கு மேலும் பலமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் ‘2.ஓ’ டீசர் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல… இந்த வீடியோவைப் பாருங்களேன்…!!
Next post உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிடாதீங்க…!!