உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிடாதீங்க…!!

Read Time:3 Minute, 45 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90தினமும் காலையில் நாம் உடற்பயிற்சி செய்து வந்தால், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

ஆனால் உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது என்று ஒருசில டயட் முறைகள் இருக்கின்றது. எனவே அந்த உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்

பச்சையான காய்கறிகள்

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் அந்த காய்கறிகளை உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் உடற்பயிற்சிக்குப் பின் நம் உடல் ஏராளமான ஊட்டச்சத்துக்களை இழந்திருக்கும். எனவே அப்போது வெறும் காய்கறிகளை சாப்பிட்டால், நமது உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

இனிப்புகள்

இனிப்பு பலகாரங்களில் இனிப்பு அதிகம் இருப்பதால், அந்த இனிப்பு பலகாரங்கள் நமது உடலின் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, உடற்பயிற்சி செய்ததன் முழு பலனை கிடைக்கப் பெறாமல் செய்கிறது.

எனவே உடற்பயிற்சிக்குப் பின் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள் அல்லது சாட் பொருட்களை சாப்பிடுவதால், நம் உடல் ரிலாக்ஸ் ஆவதை குறைக்கிறது.

எனவே உடற்பயிற்சிக்குப் பின் இந்த காரமான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கொழுப்புமிக்க உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளான சிப்ஸ், வடை, போண்டா, சமோசா போன்ற உணவுகளில் அதிக கெட்டக் கொழுப்புகள் ஏராளமான அளவில் நிறைந்துக் காணப்படுகிறது.

எனவே உடற்பயிற்சி செய்த பின் இந்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

எனர்ஜி பார்கள்

பெரும்பாலான எனர்ஜி பார்களில் சர்க்கரை மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருக்கும்.

இவற்றை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவதால், இழந்த ஆற்றல் மீண்டும் கிடைத்தது போன்று உணரச் செய்யும்.

ஆனால் நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.

பீன்ஸ்

பீன்ஸ் காய்கறி வகைகளில் ஒன்றாக இருந்தாலும், உடற்பயிற்சிக்குப் பின் இதை சாப்பிடும் போது, செரிமான மற்றும் வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே உடற்பயிற்சிக்கு பின் இந்த பீன்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியின் ‘2.ஓ’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!
Next post எதுவா இருந்தாலும் இப்படி மட்டும் உடற்பயிற்சி செய்யாதீங்க! ஓர் எச்சரிக்கை…!!