பச்சை மிளகாயின் 10 மருத்துவ நன்மைகள்…!!

Read Time:3 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3பச்சை மிளகாயில் நமக்கு தெரியாத பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது.

அதனால் தான் உணவு வகைகளில் மிளகாய் பொடி சேர்ப்பதை விட, பச்சை மிளகாயை சேர்க்கின்றோம்.

நாம் உணவில் பயன்படுத்தும் இந்த காரசாரமான மிளகாய் எவ்வகையான நோய்களை தடுக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது.

ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.

மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது.

இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.

பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது.

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈயும் கூட அதிகமாக உள்ளது.

இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.

பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை, தலைமுழுகி வந்தால் எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டான்ஸ் மாஸ்டர் சாண்டி கதாநாயகன் ஆனார்…!!
Next post சீனப் பெண் இலங்கையில் கைது…!!