துணி துவைப்பதற்கு சிறுநீர்! இது தெரியுமா உங்களுக்கு?

Read Time:2 Minute, 52 Second

cloth_washing_001-w245ரோம் உலகின் பெரிய சாம்ராஜ்யம் என்று பலரும் கருதுவார்கள். ஆனால், அது உலகின் 28வது பெரிய சாம்ராஜ்யமாக உள்ளது. இது போலவே பண்டைய ரோமியர்கள் பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பல வியக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றது.

ரோம் மற்றும் பெர்சியர்கள் ஆகிய இருவருக்கும் ஒத்துப் போகாது. எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள், ரோமின் கிளாடியேட்டர்கள் சிறந்த வீரர்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம். மேலும் அவர்களை பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

* 1900 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் ரோமில் இரண்டு அணைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

* பண்டைய ரோமானியரின் காலத்தில், ஒருவரின் தந்தையை கொலை செய்பவர்களை, ஒரு சாக்கில் நாய், விரியன் பாம்பு, சேவல் போன்ற விலங்குகளுடன் சேர்த்து கட்டி வைத்து விடுவார்கள்.

* பண்டைய ரோமனியர்கள் காலத்தில் வாழ்ந்த பெண்கள் டர்பெண்டைனை, சிறுநீரில் ரோஜா வாசம் வருவதற்காக குடித்து வந்தார்கள்.

* ரோமியர்கள் மற்றும் பெர்சியன் ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது, 721 ஆண்டுகள் நீடித்தது. எனவே இந்த மோதலானது உலகின் நீண்ட மோதலாகக் கருதப்படுகிறது.

* பண்டைய ரோமியர்களின் காலத்தில் சதுர்னாலியா எனும் கொண்டாட்டம் இருந்து வந்தது. இதில், அடிமைகள் மற்றும் அவர்களது மாஸ்டர்கள் இடம் பெற்றிருந்தார்கள்.

* நியூயார்க் நகரை போல எட்டு மடங்கு அதிகமான மக்கள் தொகை பண்டைய ரோமியர்களின் காலத்தில் இருந்தது.

* பண்டைய ரோமியர்களின் கால நாகரீகத்தில், துணிகளை துவைப்பதற்கும், பற்களை வெண்மையாக்குவதற்கும் சிறுநீரை பயன்படுத்தி வந்தார்கள்.

* ஆரம்ப காலத்தில் இருந்தே கிறிஸ்துவர்கள் பாகன் கடவுளை வணங்க மறுத்ததால், ரோமர்கள் கிறிஸ்துவர்களை ஏதிஸ்ட் என அழைத்து வந்தார்கள்.

* அழகை மேம்படுத்த பண்டைய ரோமானிய பெண்கள், கிளாடியேட்டர்களின் வியர்வையை பயன்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நொடிப்பொழுதில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பரபரப்பான காட்சி…!! வீடியோ
Next post எது பன்னாலும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே….ஆக்டோபஸ் தந்திரம்…!! வீடியோ