ஆண்களுக்கு இளம்வயதிலேயே வழுக்கை ஏற்பட இது தான் காரணமா?

Read Time:2 Minute, 34 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3ஒருவருக்கு முடி கொட்டுவது சாதரணம் தான். ஆனால் அதுவே அதிகமாக கொட்டினால் பிரச்சனை. இன்றைய காலகட்டத்தில் முடி கொட்டுவது இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது.

இதனால், விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கு தீர்வு நாம் அடிக்கடி செய்யும் ஒரு சில செயல்களை தவிர்க்க வேண்டும்.

முதலில் தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் ஸ்கால்ப் மற்றும் மயிர்கால்களை வலுவிழக்க செய்துவிடும்.

பின்பு, குளித்து முடித்த பின் டவலைக் கொண்டு மெதுவாக தலையை உலர்த்த வேண்டும். கடுமையாக தலையை தேய்த்தால், வலுவிழந்து இருக்கும் முடி கையோடு வந்துவிடும்.

ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், ஆண்களுக்கு தொப்பி அணியும் பழக்கம் இருக்கும். இவ்வாறு தொப்பி அணிவதால் முடியில் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதிகமாக வியர்த்து ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படக்கூடும்.

இதனால், முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும். எனவே தொப்பி அணிவதை தவிர்க்க வேண்டும்.

முடி கொட்டுவது சாதாரணம் தான் என்று நினைத்து விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டால் நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும்.

எனவே முடி கொட்டினால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியம்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2.0 திரைப்படத்தின் உண்மையான ஹீரோ அக்‌ஷய் குமார் தான் : ரஜினிகாந்த்..!!
Next post இதயத்தை கிழிக்கும் சம்பவம்! மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு மட்டும்…!!