சாப்பாட்டுக்கு முன் இந்த ஜூஸை குடியுங்கள்…!!

Read Time:4 Minute, 22 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70பப்பாளி மற்றும் எலுமிச்சை பழங்கள் சந்தைகளில் மிகக் குறைவான விலைகளில் கிடைத்தாலும் இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

பப்பாளி மற்றும் எலுமிச்சைப் பழங்களில் விட்டமின் A, B, C, ஆன்டி- ஆக்ஸிடன்டுகள், பொட்டாசியம், கனிமச்சத்துக்கள், பீட்டா- கரோட்டீன்கள், போன்ற நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

சிறிது பப்பாளி பழத்தை நன்றாக அரைத்து, 3 டேபிள் ஸ்பூன் அளவு பப்பாளி ஜூஸுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கும் 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதே போல தினமும் குடித்து வந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பப்பாளி மற்றும் எலுமிச்சையில் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

ஆரோக்கியமான இந்த ஜூஸை தினமும் குடித்து வருவதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், பீட்டா-கரோட்டீன்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நமது உடம்பின் உள்ள குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்குகிறது.

பப்பாளி மற்றும் எலுமிச்சை ஜூஸில் உள்ள உட்பொருட்கள், நமது உடம்பின் குடல், புரோஸ்டேட், ரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, தேவையற்ற செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கிறது.

ஜூஸில் உள்ள சத்துக்கள், நமது உடம்பின் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
காலையில் இந்த ஜூஸை குடிப்பதால், கண் பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண் பார்வையை கூர்மையாக்கி, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது.

பப்பாளி மற்றும் எலுமிச்சை கலந்த ஜூஸில், ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் இருப்பதால், இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனஅழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம்! மாட்டின் மீதான புலியின் காதல்…!!
Next post அஜித் பட இயக்குனர் திடீர் மரணம்…!!