சுய இன்பத்தில் ஈடுபடுபவரா? அதைப் படிங்க மொதல்ல..!!

Read Time:3 Minute, 55 Second

maxresdefault-7-450x253காம இச்சையை எதிரெதிர் பாலினங்களின் சேர்க்கையால் தீர்த்துக் கொள்வது உலக இயற்கை. ஆனால் மனிதன் மட்டும் தன்னுடைய துணை அருகில் இல்லாத போது, தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள சுய இன்பத்தில் ஈடுபடுகிறான்.

சுய இன்பத்தின் மூலம் தன்னுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்வது சரியா? தவறா? என்ற பெரும் விவாதம் இருந்த நிலையில், பல ஆய்வுகள் அது பற்றி நிகழ்த்தப்பட்டன.

அவ்வாறு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில், சுய இன்பம் என்பது ஆரோக்கியமான விஷயம் தான் என்றும் சுய இன்பம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் கூறப்பட்டது. புற்றுநோய் அபாயத்தைக்கூட சுய இன்பம் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

சுய இன்பத்துக்கு அடிமையாகவே மாறிவிட்டவர்கள் பெரும்பான்மையானோர். நீங்களும் தினமும் சுய இன்பத்தின் மூலம் உங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறீர்களா?

அதற்கு அடிமையாகவே மாறிவிட்டீர்களா என்பதை அறிந்து கொள்ள கீழ்வரும் அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.

மிக விரைவிலேயே உங்கள் துணையுடனான உடலுறவை முடித்துக் கொள்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காக நீங்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறீர்கள். அதிலும் உடலுறவைக் காட்டிலும் சுய இன்பத்தில் அதிக திருப்தி அடைகிறீர்கள் என்று அர்த்தம்.

சுய இன்பத்துக்குப் பழகியவர்கள் துணையுடனும் உறவு கொள்வதுண்டு. அது அவர்களுக்கு இன்னும் கூடுதலாக சுகமளிக்கும். ஆனால் நினைக்கும் போதெல்லாம் துணையுடன் உறவு கொள்ள முடியாது. ஆனால் சுயஇன்பத்தில் ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் ஈடுபட முடியும். அதற்கு கழிப்பறை கூட போதுமான இடமே.

ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் சுய இன்பத்தில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தான். ஆனால் அதற்காக ஆணுறுப்பில் வலியோ காயமோ ஆகும் அளவுக்கு சுய இன்பத்தில் ஈடுபட்டால், நிச்சயம் நீங்கள் அதற்கு அடிமை தான்.

சுய இன்பம் உடலுக்கு ஆரோக்கியததைத் தருவது தான். ஆனால் அது உங்கள் வேலை நேரத்தை முழுங்கிவிடும்படியாக ஆகிவிடாதீர்கள்.

உங்களால் உங்களுடைய வேலையில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லையா? சுய இன்பத்தில் ஈடுபட்ட நேர இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க சுய இன்பத்துக்கு அடிமையானவர்களால் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது.

அதனால் உடனடியாக உங்கள் ஆபிஸில் உள்ள கழிவறைக்குச் சென்று, சுய இன்பத்தில் ஈடுபட்டு, சுகமடைந்தபின் இயல்பு நிலைக்குத் திரும்பி, வேலையைத் தொடர்கிறீர்கள் என்றால், நீங்கள் அதற்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பது உறுதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?..!!
Next post வீதியினை கடக்கும் போது தாய்க்கும், மகனுக்கும் நேர்ந்தகொடூர சம்பவம்..!! (அதிர்ச்சி வீடியோ)