நடிகர் தனுஷ் யாருடைய மகன்? பள்ளி முதல்வர் பரபரப்பு பேட்டி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் தனுஷ் படித்த பள்ளியின் முதல்வர் உண்மை உடைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, தனுஷ் மதுரையில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் தனுஷ் படித்த தாய் சத்யா பள்ளியின் முதல்வர் சுதா விஜய்குமார் கூறியதாவது, தனுஷ் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில் தான் படித்தார். தனுஷின் தாய் விஜயலட்சுமி தினமும் பள்ளிக்கு வந்து அவரை அழைத்து செல்வார்.

தனுஷ் பத்தாம் வகுப்பு முடித்த பரிமாற்ற சான்றிதழ் பள்ளியில் தான் உள்ளது. அதில், தனுஷின் தாய் விஜயலட்சுமி கையொப்பம் போட்டுள்ளார். இதை பள்ளி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

தேவையெனில் தனுஷ் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படித்ததற்கான அனைத்து ஆதரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமனாரின் பாலியல் கொடுமை: பொலிசில் புகார் அளித்த மருமகள்..!!
Next post பேர்னஸ் க்ரீம் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவு..!!