By 19 May 2017 0 Comments

வசூல் மன்னன் பிரபாஸிற்கு அமெரிக்காவில் இப்படி ஒரு நிலைமையா?..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90பாகுபலி 2 படம் மூலம் வசூல் மன்னன் என்ற பெயர் பெற்றுவிட்டார் பிரபாஸ். பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம். தெலுங்கு மட்டும் இல்லாது பாலிவுட்டில் இருந்து கூட பட வாய்ப்புகள் கிடைக்கின்றனவாம்.

தற்போது அமெரிக்கா சென்று ஓய்வில் இருக்கும் பிரபாஸை அங்கேயும் சிலர் அடையாளம் கண்டுவிடுகிறார்களாம். ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்ற பிரபாஸ் அங்கேயும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கும் நிலைமை வந்துவிடுகிறதாம்.

இதனால் பிரபாஸ் தற்போது அமெரிக்காவில் மாறுவேடத்தில் ஊர் சுற்றுகிறாராம்.

பிரபாஸின் அடுத்த படமான சாஹோ பட படப்பிடிப்பு அமெரிக்காவிலேயே நடக்க இருப்பதால் ஓய்வு எடுத்த பிறகு பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam