அமெரிக்க பட்ஜெட்டில் பின்லேடனை பிடிக்க ரூ.1000 கோடி பணம்

Read Time:2 Minute, 40 Second

AlHaida.Binladen.jpgபின்லேடனை பிடிக்க அமெரிக்க புலனாய் வுத்துறையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அவனை பிடிக்க ரூ.1000 கோடியை அமெரிக்க அரசு ஒதுக்கி உள்ளது. சர்வதேச தீவிரவாதி பின் லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்க விமானங்களை கடத்தி நிïயார்க்கின் உலக வர்த்தகமைய கட்டிடத்தை தகர்த்தனர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகையே இது அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

பின்லேடனை பிடிக்க அமெரிக்க படையினர் பல ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பின்லேடனை பிடிக்க அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏ.யில் தனிப்பிரிவு அமைக்கப்படுகிறது. அமெரிக்க செனட் சபையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல பின்லேடனை பிடிப்பதற்காக பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கவும் செனட் சபையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு மொத்தம் ரூ.46900 கோடி டாலர் ஒதுக்கப்படுகிறது. இதில் 6300 கோடி டாலர் ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. போதை பொருள் ஒழிப்புக்காக ரூ.3220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பின்லேடன் 2001 செப்டம்பர் 11-ந் தேதி நிïயார்க் உலக வர்த்தகமைய கட்டிடம் மீது தாக்குதல் நடப்பதற்கு முன் தனது அல்கொய்தா இயக்க தீவிரவாதிகளுடன் ஆலோசனை நடத்தியதன் வீடியோ காட்சியை அல்ஜகிரா டெலிவிஷன் ஒளிபரப்பியது. மலைப் பகுதி ஒன்றில் பின்லேடன் முக்கிய தளபதிகளுடன் தாக்குதல் குறித்து அதில் ஆலோசனை நடத்துகிறான். எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்று 11 தீவிரவாதிகளுக்கு அவன் பயிற்சி கொடுக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பதவி ‘காலியாகிறது’சிக்கலில் டோனி பிளேர்
Next post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிக்கோலாய், ஃபெடரர் அரையிறுதிக்கு தகுதி!