கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி

Read Time:2 Minute, 51 Second

LTTE.Training.schooll.Children.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவ மாணவிகள் மேற்படி பாPட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆயதப் பயிற்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென புலிகளின் தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LTTE.Training.CHILDS1.jpg

அதேவேளை புலிகளின் தலைவரின் கட்டளைக்கு இணங்க, மேற்படி மாணவர்கள் கெரில்லா பயிற்சி, ஆயுதப் பயிற்சி மற்றும் தற்கொலை தாக்குதலுக்காக வெடிப்பொருட்களை கையாளும் பயிற்சி என்பனவற்றைப் பெறுவதற்கு பிரத்தியேக முகாம்கள் புலிகளால் திறக்கப்பட்டுள்ளன.

LTTE.YoungWomens-training.1jpg.jpg

யாழ்ப்பாணம், மாதகல், கிளாலி, கிளிநொச்சி, பெரியபரந்தன், முல்லைத்தீவு, இரணமடு, அடம்பன், செஞ்சோலை போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட இத்தகைய முகாம்களை புலிகளின் தலைவர் பிரபாகரன் திறந்து வைத்ததாக புலிகளின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LTTE.Training.schooll.Children.jpg
LTTE.Training.schooll.Children.4jpg.jpg
LTTE.Training.schooll.Children.3jpg.jpg
LTTE.Training.schooll.Children.2jpg.jpg

LTTE.PirabaGroup.jpgஅதேவேளை யாழ்ப்பாணம், மூது}ர், மாவிலாறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களில் புலிகள் படுதோல்வியடைந்துள்ளனர். பெரும் எண்ணிக்கையான புலிகள் இம்மோதல்களின் போது கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் புலிகள் கடும் ஆட்பற்றாக்குறை நிலவுவதால் அதனை ஈடுசெய்வதற்காகவே புலிகள் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு ஆயுதப் பயிற்சியை கட்டாயப்படுத்தியுள்ளதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LTTE.pir-21.jpg

இதேவேளை ஜூலை 20ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் மோதல்களின் போது புலிகள் தனது உறுப்பினர்கள் 1200 பேரை இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LTTE.PirabaGroup.jpgLTTE.Training.schooll.Children.1jpg.jpgLTTE.YouthsTraining.5.jpg

Thanks…WWW.ATHIRADY.COM
(நன்றி- புகைப்படம் & தகவல் ..WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!
Next post முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை