பிக்பாஸ் நமீதாவுக்கு சீனியர் நடிகருடன் திருமணமா?..!!
Read Time:1 Minute, 19 Second
நடிகை நமீதா ஒரு காலத்தில் மச்சான்ஸ் என கூப்பிட்டு பலரையும் கவர்ந்து இழுத்தவர். பின் படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. மலையாளத்தில் புலிமுருகன் படத்தின் மூலம் மார்க்கெட் இவருக்கு சூடுபிடித்தது.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மீண்டும் பேசப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மூத்த நடிகரான சரத் பாபுவுடன் திருமணம் என தெலுங்கு சினிமாவில் தகவல்கள் உலாவியுள்ளது.
இதுபற்றி சரத்பாபு கூறும் போது, நமீதாவுடன் எனக்கு திருமணம் என்பது வதந்தி. இது இப்போதல்ல கடந்த 8 வருட காலத்திற்கு முன்பு நமீதாவை சந்தித்தபோதிலிருந்து இதுபோல நடந்து வருகிறது.
என்னை பற்றி இப்படி எழுதுவதை சில வாழ்க்கையாக வைத்திருக்கிறார்கள். அது வெறும் வதந்தி தான். தமிழ் சினிமாவின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்தோம் என அவர் கூறியுள்ளார்.
Average Rating