வன்னிக்கு நோர்வே தரப்பினர் செல்ல அரசு தரப்பினர் அனுமதி இல்லை என்கிறது அரசு – புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால் தான் பேச்சாம்

Read Time:2 Minute, 58 Second

நோர்வேயின் அனுசரணையாளர்கள் வன்னிக்கு செல்வதற்கு அனுமதிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தாலேயே மீண்டும் பேச்சு எனவும் கூறியுள்ளது. அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க ‘ராய்டர்’ செய்திச்சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார் நோர்வேயின் விஷேட தூதுவர் வன்னிக்கு செல்ல விரும்பினார். எனினும் நாங்கள் எதற்காக அங்கு செல்ல விரும்புகிறார் என்பதை தெளிவாக தெரிவிக்கவேண்டும் என அவரிடம் கூறிவிட்டோம் என்று ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டார். விடுதலைப்புலிகள் தங்களை ஹன்சன் பவர் ஏன் சந்தித்து பேச்சு நடத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஹன்சன் பவர் வன்னிக்கு செல்வதையும் அவர்கள் அவருடன் சேர்ந்து புகைபடமெடுத்த பின்னர் தமிழீழத்தின் தமிழ் மக்களின் மீது இழைக்கப்பட்ட துயரத்தை பார்வையிட ஹன்சன் பவர் வந்துள்ளார் என தெரிவிப்பதையும் நாம் விரும்பவில்லை அதுபிரசாரம் அதனை அனுமதிக்க முடியாது என்று விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார். நோர்வேயிடம் தெளிவானத் திட்டம் இருக்க வேண்டுமென இலங்கை அரசு விரும்புகிறது ஜனநாயக அரசியல் தீர்விற்கு இட்டுச்செல்லும் சமாதானத் திட்டம் இல்லாதவரை விடுதலைப்புலிகளின் பேச்சுக்கான வேண்டுகோளை நம்பமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் உடன்படிக்கையும் அர்பணிப்பும் சமாதான திட்டத்தின் ஒருபகுதியாக அமைய வேண்டும் மேலும் ஆயுதங்களை ஒப்படைப்பதும் அதில் அடங்கியிருக்க வேண்டும் இந்த திட்டம் பேச்சு மூலமான அரசியல் தீர்விற்கான நேர்மையான அர்பணிப்பை கொண்டுள்ளது. என நாம் நம்பவேண்டும் என்று தெரிவித்துள்ள விஜேசிங்க ஆகக்குறைந்தது விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியாவது வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெஹிவளையில் 22 தமிழர்கள் கைது
Next post அம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்!