இலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க

Read Time:3 Minute, 8 Second

இலங்கை ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான தயாசிறி ஜயசேகரவே மேற்படி தகவலை தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஊடகவியலாளருக்குப் பாதுகாப்பில்லை ஊடக சுதந்திரம் முற்றாக மீறப்பட்டுள்ளது அரசு சொல்வதையே செய்தியாக வெளியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தநடவடிக்கைகள் தொடர்பாகவோ அல்லது யுத்ததளபாடங்கள் கொள்வனவு தொடர்பாகவோ செய்திகளை வெளியிட கூடாதென்று அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது யுத்தத்திற்கு 17ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது இந்த பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் யுத்தம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மக்களின் கடமை அவ்வாரான செய்திகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு உள்ள உரிமையாகும் அதையாராலும் தடுக்கமுடியாது யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிடுவோரை தேச விரோத ஊடகவியலாளர் என்று முத்திரை குத்தி அவர்களை கொலை செய்யவும் அரசு தயங்காது கடந்த வருடத்தில் மாத்திரம் 11 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள் இப்போது பல ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் தற்போது இலங்கை மூன்றாமிடத்தில் இருக்கிறது. அதுமாத்திரமின்றி 27 ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்தும் ஊடக சுதந்திரத்தை மீறாது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்
Next post துபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’