By 25 June 2008 0 Comments

அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலில் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார். இப்போது இவர் கடற்படையில் 2 மாதங்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடலில் உள்ள போதைபொருள் கடத்தல்காரர்களை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை பிரிவில் அமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்த பணியின் ஒருபகுதியாக இவர் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பலில் கடந்த 24 மணி நேரமாக பணியாற்றினார். இன்னொரு நீர்மூழ்கிக்கப்பலை தாக்கி அழிக்கும் பணியில் வில்லியம் பங்கு எடுத்து கொண்டார். இவர் நீர்மூழ்கிக்கப்பலில் உள்ள கண்ட்ரோல் அறையில் இருந்து செயல்பட்டார்.



Post a Comment

Protected by WP Anti Spam